Technology

"இன்னும் மூன்று ஆண்டுகளில் 5ஜி"

இன்னும் 3 ஆண்டுகளில் இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை பயன்பாட்டுக்கு வந்து விடும் என்று தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராயின் செயலாளர் எஸ்.கே.குப்தா தெரிவித்துள்ளார்.  இந்தியாவை பொறுத்தவரையில் செல்போன் பயனாளர்கள் தற்போது 4ஜி இணைய சேவையை பயன்படுத்தி வருகின்றனர். 4ஜி மூலம் அதிவேக இண்டர்நெட், லைவ் ஸ்ட்ரீமிங், மொபைல் டி.வி, தடைபடாத துல்லியமான வீடியோ கால்கள் போன்ற எண்ணற்ற வசதிகள் சாத்தியமாகின.  இந்நிலையில் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் 5ஜி …

Read More »

ஆசஸ் ‘மேக்ஸ் எம்2’, ‘மேக்ஸ் ப்ரோ எம்2’ – டிசம்பர் 11 வெளியீடு

ஆசஸ் சென்ஃபோன் நிறுவனத்தின் ‘மேக்ஸ் எம்2’, ‘மேக்ஸ் ப்ரோ எம்2’ மாடல் ஸ்மார்ட்போன்கள் வரும் 12ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்தியாவின் தற்போதைய டிஜிட்டல் சந்தையில், ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது. ஒரு நிறுவனம் குறைந்த விலையில் தரமான கேமரா கொடுத்தால், மற்றொரு ஜிபி அதிகமான ரேம் கொடுக்கிறது. இதேபோன்று பெரிய டிஸ்ப்ளே, அதிக இண்டெர்நல் ஸ்டோரேஜ், செல்ஃபி கேமரா என ஒவ்வோரு நிறுவனமும் ஒருவித ஸ்பெஷல் ஆப்ஷனுடன் …

Read More »

48 எம்பி கேமராவுடன் புதிய சியோமி ஸ்மார்ட்போன்

சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் ஒன்று 48 மெகா பிக்ஸல் கேமராவுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் அனைவரிடமும் உள்ளது. இதில் எந்த ஸ்மார்ட்போன் குறைந்த விலையில், மிகுந்த வசதிகளை கொடுக்கின்றனவோ, அவை வாடிக்கையாளர்கள் வரவேற்பை பெறுகின்றது. இந்த வரவேற்பை பெறுவதற்காக அனைத்து நிறுவனங்களும் போட்டிபோட்டுக் கொண்டிருக்கின்றன. இதிலும் துல்லியமாக புகைப்படம் மற்றும் வீடியோ காட்சியை பதிவு செய்யும் கேமரா கொண்ட போன்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் தனி மவுசு உள்ளது. …

Read More »

வெற்றிகரமாக ஏவப்பட்டது அதிக கனம் கொண்ட ஜிசாட் 11 செயற்கைக்கோள்..!

இந்தியாவின் தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் ஜிசாட் 11 பிரென்ச் கயானாவிலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது. ஏரியான் ராக்கெட் மூலம் ஏவப்பட்ட ஜிசாட் 11 இந்தியா இதுவரை செலுத்தியுள்ள தொலைத்தொடர்பு செயற்கைக்கோள்களிலேயே அதிக கனமானது. 5854 கிலோ எடை கொண்ட ஜிசாட் 11 செயற்கைக்கோள் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் தொலைதூர கிராமங்களுக்கு பிராட்பேன்ட் இணைய சேவை அளிக்க உதவும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோவின் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். ஜிசாட் …

Read More »

5ஜி தொழில்நுட்ப சோதனை : கொத்துக்கொத்தாக மடிந்த குருவிகள்

நெதர்லாந்தில் 5ஜி தொழில்நுட்பத்திற்கான சோதனை நடைபெற்ற பகுதியில் கொத்துக்கொத்தாக குருவிகள் செத்து மடிந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்தியாவில் திரைக்கு வந்துள்ள ‘2.O’ திரைப்படம், சிட்டுக்குருவிகள் அழிவுக்கு செல்போன் கோபுரங்களும், செல்போன்களும் தான் காரணம் என்கிற மையப்புள்ளியை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. உண்மையில் சிட்டுக்குருவிகளின் அழிவுக்கு செல்போன்கள்தான் காரணமாக இருக்குமோ என்ற எண்ணம் படம் பார்த்த அனைவருக்க‌மே எழுந்தது.  ஆனால் செல்போன்களுக்கும், செல்போன் டவர்களுக்கும் சிட்டுக் குருவிகள் மரணத்தில் தொடர்பில்லை என …

Read More »

2 டிஸ்ப்ளேகளுடன் வரும் விவோ ‘நெக்ஸ் 2’

விவோ நிறுவனத்தின் புதிய மாடலான ‘நெக்ஸ் 2’ ஸ்மார்ட்போன் இரண்டு டிஸ்ப்ளேகளுடன் வெளியாகவுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது அதிகவேகமாக சென்றுகொண்டிருக்கிறது. மற்ற நவீன சாதனங்களுடன் ஒப்பிடுகையில் செல்போன் என்பது இதில் இமாலய வளர்ச்சி பெற்று வருகிறது. ஒரு மனிதனை ஒரே இடத்தில் பல மணி நேரங்கள் முடக்கிப்போடுவதற்கு ஒரு ஸ்மார்ட்போன் போதும் என்ற நிலை உருவாகிவிட்டது. குறிப்பாக இளைஞர்களின் நேரத்தை ஸ்மார்ட்போன்களும், கேம்களும் 80% எடுத்துக்கொள்கின்றன. ஸ்மார்ட்போன்களின் …

Read More »

“இணைய வேகத்தை அதிகரிக்கும்”- நாளை மறுநாள் விண்ணில் பாய்கிறது ஜிசாட் 11..!

இந்தியாவில் இணைய தள வேகத்தை அதிகரிக்கக் கூடியதும், இதுவரை இல்லாத அதிக எடை கொண்டதுமான செயற்கைக்கோளை இஸ்ரோ நாளை மறுநாள் விண்ணில் செலுத்தவுள்ளது. பிரெஞ்சு கயானாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து 5.9 டன் எடை கொண்ட GSAT 11 என்ற செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது. இந்த செயற்கைகோள் மூலம், இணையதள வேகம் அதிகமாகும் என கூறப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் விண்ணில் செலுத்தப்பட்ட GSAT 6A செயற்கைகோள் கண்காணிப்பு …

Read More »

பணப்பட்டுவாடா சேவையில் நுழையும் வாட்ஸ்அப் – ரிசர்வ் வங்கியிடம் ஒப்புதல் கேட்டு கடிதம்

வாட்ஸ்அப் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களிடையே பணம் அனுப்புதல் மற்றும் பெறும் சேவையை வழங்க ரிசர்வ் வங்கியிடம் ஒப்புதல் கேட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள தனது 20 கோடி வாடிக்கையாளர்களுக்கு பணப்பட்டுவாடா சேவை வழங்க ஒப்புதல் தருமாறு வாட்ஸ்அப் நிறுவன தலைவர் கிறிஸ் டேனியல்ஸ் ரிசர்வ் வங்கிக்கு முறைப்படி கடிதம் எழுதியுள்ளார்.  முன்னதாக வாட்ஸ்அப் நிறுவனம் தனது சுமார் 10 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு கடந்த சில மாதங்களாக சோதனை ரீதியில் பணப்பட்டுவாடா …

Read More »

மீண்டும் பறக்க தயாராகும் சோயுஸ் விண்கலம்… கவுன்ட் டவுன் தொடக்கம்

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்வதற்காக, ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் புறப்படுவதற்கு கவுன்ட் டவுன் தொடங்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் கஜகஸ்தானில் இருந்து கடந்த அக்டோபர் மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு புறப்பட்ட சோயுஸ் விண்கலத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, அந்த விண்கலத்தின் அவசர வழியில் இருந்து தனி கேப்சூல் மூலம் கீழே குதித்து அதில் இருந்த வீரர்கள் உயிர் தப்பினர். இந்தத் தோல்வியை அடுத்து, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி வைக்கும் திட்டம் …

Read More »

‘சிம் நிறுவனங்களின் மினிமம் ரீசார்ஜ்க்கு செக்’ – ட்ராய் கிடுக்கிப்பிடி

குறைந்தபட்ச ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களின் இன்கமிங் கால்களை நிறுத்தக்கூடாது என சிம் நிறுவனங்களை ட்ராய் எச்சரித்துள்ளது. இந்தியாவில் செல்போன் வாடிக்கையாளர்கள் மத்தியில் கொடிகட்டி பறந்த நிறுவனங்களாக ஏர்டெல், வோடாஃபோன், ஏர்செல் மற்றும் ஐடியா ஆகியவை திகழ்ந்தன. ஆனால் இந்த நிறுவனங்கள் அனைத்து ஜியோவின் வருகைக்குப் பிறகு கடும் சரிவை சந்தித்துள்ளன. குறிப்பாக ஜியோவின் இலவச டேட்டா மற்றும் அழைப்புகளால் அனைத்து சிம் நிறுவனங்கள் பெரிய இழப்பை சந்தித்துள்ளன. இதில் ஏர்செல் …

Read More »