Examinations

பட்டதாரியா நீங்கள்? சப்- இன்ஸ்பெக்டராக வாய்ப்பு

தமிழக காவல்துறையில் உதவி ஆய்வாளர் (கைரேகை) பணிக்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 202 உதவி ஆய்வாளர் (கைரேகை பிரிவு) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு ஆண், பெண், மற்றும் மூன்றாம் பாலினத்தினர் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் www.tnusrbonline.org என்ற இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய சந்தேகம் இருப்பின் தங்களது மாநகர காவல் ஆணையர் அலுவலகம் …

Read More »

டிஎன்பிஎஸ்சி வினாத்தாளில் பிழைகள்: தேர்வர்கள் கவலை

டி.என்.பி.எஸ்.சி நடத்திய வேளாண் அதிகாரி பணிக்கான தேர்வின் வினாத்தாளில் பிழைகள் இருந்தது தெரிய‌வந்துள்ளது. 28 மற்றும் 7‌1-ஆவது வினாக்களுக்கான அனைத்து விடைகளும் தவறாக வழங்கப்பட்டுள்ளதாக தேர்வர்கள் கூறியுள்ளனர். இந்தியாவில் முதன்முதலாக அரசுப் பணியாளர் தேர்வாணையம் 19‌23-ஆம்‌ ஆண்டில் அமைக்கப்பட்டது. ஆனால், அந்த விடை 4 ஆப்ஷன்களிலும் வழங்கப்படவில்லை. அதேபோல், முதல் ரயத்வாரி செட்டில்மெண்ட் எங்கு, எந்த ஆண்டு தொடங்கப்பட்டது என்ற வினாவிற்கும் சரியான விடை ஆப்ஷன்களில் வழங்கப்படவில்லை. இதுதவிர, 24-ஆ‌வது …

Read More »

காலாண்டு தேர்வு நெருங்கிவிட்டது.. இன்னும் பள்ளிகளுக்கு புத்தகங்கள் செல்லவில்லை..!

காலாண்டு தேர்வு நெருங்கிவிட்ட சூழலில் இன்னும் பல பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் சென்றடையவில்லை. தமிழகம் முழுவதும் இந்தாண்டு கடந்த ஜூன் மாதம் முதலே பள்ளிகள் தொடங்கி செயல்பட்டு வருகின்றன. பள்ளிகள் தொடங்கி மூன்று மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் ஒரு வார காலத்தில் காலாண்டுத் தேர்வுகளும் ஆரம்பமாக உள்ளன. இந்நிலையில் பல பள்ளிகளுக்கு 11-ஆம் வகுப்பு பாடப் புத்தகங்கள் சென்றடையவில்லை என கூறப்படுகிறது. மொழிப்பாடங்களில் தமிழை தவிர பிற மொழிப் பாடங்களை …

Read More »

அடுத்தடுத்து வரும் போட்டித் தேர்வுகள் – முக்கிய தேதிகள் விவரம்

பல்வேறு நுழைவுத் தேர்வுகள், தகுதித் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் தொடங்கியுள்ளது.  கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியில் சேருவதற்கு அவசியப்படும் NET எனப்படும் தேசிய தகுதித் தேர்வுக்கு வரும் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். டிசம்பர் 9 முதல் 23ஆம் தேதி வரை கணினி வழித் தேர்வாக நடத்தப்பட உள்ளது. முடிவுகள் ஜனவரி 10ஆம் தேதி வெளியிடப்படும். மத்திய கல்வி நிறுவனங்களில் பொறியியல் பயில்வதற்கான நுழைவுத் தேர்வான ஜெ.இ.இ மெயின் தேர்வுக்கு …

Read More »

அரசு பள்ளி மா‌ணவர்கள் 4 பேருக்கு மட்டுமே எம்பிபிஎஸ் வாய்ப்பு

நடப்பாண்டில் அரசு பள்ளிகளில் படித்த 4 மாணவர்கள் மட்டுமே எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்திருப்பது தெரிய வந்துள்ளது. நீட் எனப்படும் அகில இந்திய நுழைவுத் தேர்வு அடிப்படையிலேயே நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. தமிழகத்தில் இருக்கும் 22 அரசு மருத்துவ கல்லூரிகளில் 2 ஆயிரத்து 447 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இதில் அரசு பள்ளிகளில் படித்த 4 மாணவர்களுக்கு மட்டுமே எம்பிபிஎஸ் படிப்பில் சேரும் வாய்ப்பு கி‌டைத்துள்ளது. …

Read More »

இன்ஜினியரிங் படிப்புகளுக்கு இப்படி ஒரு நிலைமையா..?

168 பொறியியல் கல்லூரிகளில் மொத்தமாக 40 சதவீத இடங்களே நிரம்பியுள்ளதாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பொறியியல் படிப்புக்கென்று தனி மதிப்பு இருந்தது. படித்து முடித்ததும் கை நிறைய சம்பளத்தில் வேலை இருக்கும் என்ற எண்ணமும் பெற்றோர்கள் மத்தியில் இருந்தது. இதனால் தங்களது குழந்தைகளை பொறியியல் படிப்பில் சேர்ப்பதற்கு ஆர்வம் காட்டினர். ஆனால் தற்போது ஏராளமான பொறியியல் பட்டதாரிகள் தாங்கள் படித்த படிப்பிற்கு …

Read More »

இந்தியன் வங்கியில் வேலை – வேலை தேடுவோர் கவனத்திற்கு

நாட்டின் மிகப்பெரிய வங்களில் ஒன்றான இந்தியன் வங்கியில் பயிற்சியுடன் கூடிய வேலைக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தமாக 417 காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்கும் நபர்களில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு மணிபாலில் உள்ள பயிற்சி மையத்தில் பயிற்சி கொடுக்கப்படும். அதில் தேர்வாகும் நபர்கள் பணியமர்த்தப்படுவார்கள். இளங்கலை படிப்பு முடித்த யாரும் இதற்கு விண்ணப்பிக்கலாம் விண்ணப்பிக்கும் முறை  1 உங்களது பிரவுசரில் http://www.indianbank.in/ என்ற முகவரிக்கு செல்லவும் …

Read More »

நீட் தேர்வு பாடங்களில் 0, -1 மதிப்பெண்கள் பெற்று மருத்துவராகும் மாணவர்கள்..!

நீட் தேர்வில் இயற்பியல், வேதியியல் போன்ற பாடங்களில் 0, -1 போன்ற மதிப்பெண்களை பெற்றிருந்த போதும் அவர்கள் தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்று வருகின்றனர். மருத்துவ படிப்பில் சேர்வதற்கு நீட் நுழைவுத் தேர்வை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. மொத்தமாக 720 மதிப்பெண்களுக்கு இத்தேர்வு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு வினாக்களுக்கும் தலா 4 மதிப்பெண்கள் என மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்படுகிறது. இயற்பியல், வேதயியல், உயிரியல் போன்ற பாடங்களில் இருந்துதான் கேள்விகள் …

Read More »

58% பேருக்கு இன்ஜினியரிங் கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை இல்லை: அதிர்ச்சி ரிப்போர்ட்

நடப்பு ஆண்டில் வளாகத் தேர்வு மூலம் வேலை கிடைத்த இன்ஜினியர்களின் சதவீதம் அதிகரித்துள்ளது. அதேசமயம் இன்னும் 58 சதவீத இன்ஜினியரிங் மாணவர்களுக்கு வளாகத் தேர்வு மூலம் வேலை கிடைக்காமல் உள்ளதும் தெரியவந்துள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன் இன்ஜினிரியங் படிப்புக்கென்று தனி மரியாதை இருந்தது. படித்த முடித்தவுடன் கையில், அதிக சம்பளத்துடன் வேலை கிடைப்பதால் அதில் சேருவதற்கு பலரும் ஆர்வம் காட்டினர். ஆனால் சமீப காலமாக இன்ஜினியரிங் துறை சற்று …

Read More »

மருத்துவப் படிப்புக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு நிறுத்தம்

அகில இந்திய அளவிலான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு தமிழ் வினாத்தாளில் 49 வினாக்கள் தவறாக இருந்ததால், கருணை மதிப்பெண் வழங்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை நேற்று முன்தினம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை விசாரிக்கப்பட்டது. அப்போது மருத்துவ கவுன்சில் பரிந்துரையின் பேரில் மருத்துவக் கல்வியின் தர‌த்தை உயர்த்தும் நோக்கத்தில் தான் நீட் தேர்வு …

Read More »