Examinations

சென்னையில் நாளை வேலைவாய்ப்பு முகாம் – 8வது முதல் டிகிரி வரை வாய்ப்பு

சென்னையில் நாளை தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடக்கவுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களின் வேலைவாய்ப்பு அலுவலங்களிலும் வெள்ளிக்கிழமைகளில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நாளை சென்னை, கிண்டியில் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. இந்த முகாமில் 10க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன. இதன்மூலம் 500க்கும் மேற்பட்டோருக்கு வேலை வழங்கப்படவுள்ளது. இதில் 8ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு, ஐடிஐ, பாலிடெக்னிக், 12ஆம் …

Read More »

நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு..!

கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவு நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. இந்திய பொருளாதார சூழலை ஆய்வு செய்யும் CMIE என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் அக்டோபர் மாதத்தில் நாட்டில் வேலைவாய்ப்பின்மை 6.9 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. அதே போல உழைக்கத் தயாராக இருப்பவர்களின் விகிதம் 42.4 சதவிகிதமாக குறைந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் அதாவது, பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு உழைக்கத் தயாராக இருப்பவர்களின் …

Read More »

குரூப் 2 வினாத்தாள் தமிழிலும் இருக்கும்- டிஎன்பிஎஸ்சி

குரூப்2 தேர்வுகளுக்கு தமிழிலும் வினாத்தாள் இருக்கும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள குரூப் 2 பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் சிலவற்றை நடப்பாண்டில் தமிழில் நடத்த முடியாது என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் குரூப் 2 தேர்வுகளுக்கு தமிழிலும் வினாத்தாள் இருக்கும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி விளக்க …

Read More »

10 மாதங்களுக்குள் குரூப் 1 தேர்வுகளுக்கு இறுதி முடிவு – டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

இனிவரும் காலங்களில் நடத்தப்படும் குரூப் 1 தேர்வுகளுக்கு 10 மாதங்களுக்குள் இறுதி முடிவுகள் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 1 தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து 2 மாதங்களில் முதல் நிலைத்தேர்வும், அதனைத் தொடர்ந்து 2 மாதங்களில் தேர்வு முடிவுகளும், அதன் பின்னர் 2 மாதங்களில் முதன்மை எழுத்துத் தேர்வும் நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. தேர்வு எழுதி 3 …

Read More »

உளவுத்துறையில் வேலை செய்ய விருப்பமா..? உங்களுக்கு ஒரு வாய்ப்பு

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உளவுத்துறையில் காலியாக உள்ள பாதுகாப்பு உதவியாளர் பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்தியர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 1054 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் (www.mha.gov.in) or (www.ncs.gov.in)  என்ற இணையதளத்தில் இதற்காக விண்ணப்பிக்கலாம். முக்கியமான நாட்கள் ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்- அக்டோபர் 20, 2018 ஆன்லைன் விண்ணப்பம் நிறைவு- …

Read More »

பொறியியல் படித்தவர்களுக்கு வேலை கிடைக்கும் !

இன்று தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கான பொறியியற் கல்லூரிகள் உள்ளன. லட்சக்கணக்கான பொறியியல் இடங்கள் உள்ளன. இந்த பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு எப்படி உள்ளது என்பது சமீப காலமாக மீண்டும் மீண்டும்  கேள்விக்குள்ளாக்கப்பட்டு வரும் ஒரு விவாதப் பொருளாகும்.  இந்த கட்டுரையில்  தகவல் தொழில்நுட்ப துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் பொறியியல் படிப்பு படித்தவர்களுக்கு எவ்வாறு  ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக உள்ளது என்பதை நாம் காண்போம். ஒரு பொறியியல் …

Read More »

தமிழ்நாடு வனத்துறையில் வேலைவாய்ப்பு – 1178 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு வனத்துறையில் காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு வனத்துறையில் நிரப்பப்பட உள்ள பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வனத்துறை பணியிடங்களுக்கான தேர்வுகள் ஆன் லைன் மூலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  பணியிடங்கள் மற்றும் சம்பள விவரம்:- வனத்துறை அதிகாரி காலிப்பணியிடங்கள் – 300 சம்பளம் – ரூ.35,900 – ரூ113500  வனத்துறை காவலர் காலிப்பணியிடங்கள் – 726 சம்பளம் – ரூ.18,200 – ரூ57,900 டிரைவிங் லைசென்சுடன் …

Read More »

சென்னை பல்கலைக்கழகத்தில் வேலை ! – தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை

சென்னை பல்கலைக்கழகத்தில் திட்டப்பணியளார்கள் வேலைக்கு ஆட்கள் எடுக்கப்படுகின்றனர். சென்னை, சேப்பாக்கத்தில் அமைந்துள்ள சென்னை பல்கலைக்கழகத்தில் திட்டப்பணியாளர்கள் வேலைக்கு 2 பேர் எடுக்கப்படுகின்றனர். இந்த திட்டப்பணியாளர் பணி 3 வருடங்கள் நடைபெறும். இந்திய அரசின் தாவர தொழில்நுட்பத்துறை சார்பில் நடைபெறும் தாவர நோய்த்தோற்று கிருமிகள் தொடர்பான திட்டப்பணிக்காக இந்த 2 வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் எம்.எஸ்.சி அல்லது எம்.டெக் பிரிவில் உயிரி இயற்பியல், உயிரித் தொழில்நுட்பம், உயிர் தகவலியல், கணக்கீட்டு …

Read More »

நீட் தேர்வு ஆன்லைன் முறை வாபஸ் – தேசிய தேர்வு முகமை

நீட் தேர்வை ஆன்லைனில் நடத்தும் அறிவிப்பை வாபஸ் பெறுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.  தேசிய தேர்வு முறை அறிவிப்பில், கடந்த முறை எத்தனை மொழிகளில் தேர்வு நடைபெற்றதோ, அதே அளவு மொழிகளில் இந்தமுறை நடைபெறுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, பிப்ரவரி மற்றும் மே என இரு காலகட்டங்களில் நீட் தேர்வு நடைபெறுமென அறிவிக்கப்பட்டதை ரத்து செய்து, மே மாதத்தில் ஒருமுறை மட்டுமே நீட் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  மத்திய …

Read More »

10 மற்றும் 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளில் மாற்றம்

2020ஆம் ஆண்டு முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முறைகளில் மாற்றம் கொண்டு வர சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது. புதிய முறைப்படி, மாணவர்கள் பாடங்களை அப்படியே மனப்பாடம் செய்து பதில் எழுதுவதை தவிர்க்க, பகுப்பாய்வுத் திறனை சோதிக்கும் வகையில் தேர்வில் கேள்விகள் கேட்கப்படும். பெரும்பாலும், பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையிலான கேள்விகளும், 1 முதல் 5 மதிப்பெண்கள் வரையிலான கேள்விகளுமே அதிகம் கேட்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.  குறைந்த எண்ணிக்கையிலான …

Read More »