மீண்டும் பறக்க தயாராகும் சோயுஸ் விண்கலம்… கவுன்ட் டவுன் தொடக்கம்

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்வதற்காக, ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் புறப்படுவதற்கு கவுன்ட் டவுன் தொடங்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் கஜகஸ்தானில் இருந்து கடந்த அக்டோபர் மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு புறப்பட்ட சோயுஸ் விண்கலத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, அந்த விண்கலத்தின் அவசர வழியில் இருந்து தனி கேப்சூல் மூலம் கீழே குதித்து அதில் இருந்த வீரர்கள் உயிர் தப்பினர். இந்தத் தோல்வியை அடுத்து, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி வைக்கும் திட்டம் …

Read More »

‘சிம் நிறுவனங்களின் மினிமம் ரீசார்ஜ்க்கு செக்’ – ட்ராய் கிடுக்கிப்பிடி

குறைந்தபட்ச ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களின் இன்கமிங் கால்களை நிறுத்தக்கூடாது என சிம் நிறுவனங்களை ட்ராய் எச்சரித்துள்ளது. இந்தியாவில் செல்போன் வாடிக்கையாளர்கள் மத்தியில் கொடிகட்டி பறந்த நிறுவனங்களாக ஏர்டெல், வோடாஃபோன், ஏர்செல் மற்றும் ஐடியா ஆகியவை திகழ்ந்தன. ஆனால் இந்த நிறுவனங்கள் அனைத்து ஜியோவின் வருகைக்குப் பிறகு கடும் சரிவை சந்தித்துள்ளன. குறிப்பாக ஜியோவின் இலவச டேட்டா மற்றும் அழைப்புகளால் அனைத்து சிம் நிறுவனங்கள் பெரிய இழப்பை சந்தித்துள்ளன. இதில் ஏர்செல் …

Read More »

விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-43 ராக்கெட்

ஹைசிஸ் உட்பட 31 செயற்கைக்கோள்களை விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியுள்ளது பிஎஸ்எல்வி சி-43 ராக்கெட்.  இந்தியா உருவாக்கிய ஒரு செயற்கைக்கோளும், வெளிநாடுகளைச் சேர்ந்த 30 செயற்கைக்கோளும் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதலாம் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இந்தியாவின் வேளாண்மை, வனப்பகுதி, கடலோர பகுதி, உள்நாட்டு நீர் நிலைகள், மண்வளம் மற்றும் ராணுவ உளவுப் பணிக்காக ‘ஹைபர்ஸ்பெக்ட்ரல் இமேஜிங்’ (ஹைசிஸ்)’ என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை இஸ்ரோ உருவாக்கியது. டிஜிட்டல் இமேஜிங் சக்தியுடன், …

Read More »

‘ஹவாய் மேட் 20 ப்ரோ’ வெளியீடு : 40 எம்பி கேமரா..

ஹாவாய் நிறுவனத்தின் ‘மேட் 20 ப்ரோ’ மாடல் ஸ்மார்ட்போன் இன்று இந்தியாவில் வெளியாகியுள்ளது.  ஆப்பிள், சாம்சங், ஒன் ப்ளஸ் போன்ற முன்னணி நிறுவனங்களில் ஸ்மார்ட்போன்களுக்கு இணையாக தங்கள் நிறுவன ஸ்மார்ட்போன்களையும் வெளியிட வேண்டும் என்ற முனைப்பில் ஹவாய் நிறுவனம் புதிய போன்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ‘மேட் 20 ப்ரோ’ மாடல் ஸ்மார்ட்போனை இன்று இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இதன் விலை ரூ.69,990 ஆகும். இது ஆண்ட்ராய்டு 9.0 பெய் …

Read More »

செவ்வாயில் தரையிறங்கிய இன்சைட் விண்கலம்.. புகைப்படம் அனுப்பியது..!

நாசாவின் இன்சைட் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. செவ்வாய் கிரகத்தின் ஆழமான உட்புறத்தை ஆய்வு செய்ய நாசாவால் வடிவமைக்கப்பட்ட முதல் ரோபோ விண்கலம் இன்சைட். இதனை கடந்த மே மாதம் 5-ஆம் தேதி நாசா விண்ணில் செலுத்தியது. வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட இன்சைட் விண்கலம் தனது பயணத்தை தொடர்ந்தது. 6 மாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில், 26-ஆம் தேதி இன்சைட் விண்கலத்தை செவ்வாய் கிரகத்தில் தரையிறக்க நாசா விஞ்ஞானிகள் திட்டமிட்டனர். …

Read More »

31 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி43 ராக்கெட் !

ஆந்திரம் மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவாண் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வரும் 29 ஆம் தேதி 31 ராக்கெட்டுகளுடன் பிஎஸ்எல்வி சி43 ராக்கெட் விண்ணில் ஏவப்பட இருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இதில் இந்தியா உருவாக்கிய ஒரு செயற்கைக்கோளும், வெளிநாடுகளைச் சேர்ந்த 30 செயற்கைக்கோளும் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதலாம் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்த இருப்பதாக இஸ்ரோ அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் வேளாண்மை, வனப்பகுதி, கடலோர பகுதி, உள்நாட்டு நீர் நிலைகள், …

Read More »

டி.என்.பி.எஸ்.சி வேலைவாய்ப்பு : 41 பணியிடங்களுக்கு ஆட்கள் தேவை

முதல்வர், துணை இயக்குநர் மற்றும் துணை இன்ஜினியர் ஆகிய பணியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி ஆட்களை தேர்வு செய்யவுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) சார்பில் முதல்வர், தொழில்துறை மைய பயிற்சியாளர் அல்லது பயிற்சித் துணை இயக்குநர் பணிக்கு 9 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதேபோன்று தொழில்துறையின் துணை இன்ஜினியர் பணிக்கு 32 பேர் வேலைக்கு எடுக்கப்படவுள்ளனர். இதுதொடர்பான அறிவிப்பு டி.என்.பி.எஸ்.சி சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், காலியான பணிகளுக்கு 24.12.2018ஆம் தேதிக்குள் …

Read More »

நோக்கியா 8.1 : இந்தியாவில் டிசம்பர் 5-ல் வெளியீடு

நோக்கியா நிறுவனத்தின் 8.1 மாடல் ஸ்மாட்ர்போன் இந்தியாவில் டிசம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்டோஸ் போன்களுக்குப் பிறகு நோக்கியா நிறுவனம் ஆண்ட்ராய்டு போன்களையும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் புதிய மாடலான 8.1 ஸ்மார்ட்போனை வரும் டிசம்பர் 5ஆம் தேதி இந்தியாவில் வெளியிடுகிறது. இதன் விலை ரூ.23,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த போனில் 6.18 இன்ச் ஹெச்.டி டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் 4 ஜிபி ரேம் மற்றும் …

Read More »

இன்ஃபினிக்ஸ் ‘நோட் 5 ஸ்டைலஸ்’ வெளியீடு : விலை, சிறப்பம்சங்கள்

இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் ‘நோட் 5 ஸ்டைலஸ்’ ஸ்மார்ட்போன் இன்று இந்தியாவில் வெளியாகியுள்ளது. டெல்லி இன்று வெளியிடப்பட்ட ‘நோட் 5 ஸ்டைலஸ்’ ஸ்மார்ட்போனில் வோல்ட் ஆஃப்ஷனுடன் இரட்டை நானோ சிம் பொருத்தலாம். ஆண்டராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தில் செயல்படும் இந்த போன் 5.93 இன்ஞ் ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே கொண்டது. இது 85 சதவிகிதம் என்.டி.எஸ்.சி ‘கலர் கோமட்’டை ஏற்றுக்கொள்ளும். ஸ்டோரேஜை பொருத்தவரை 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி …

Read More »

வாட்ஸ் அப்-பின் இந்திய தலைவர் நியமனம்!

வாட்ஸ் அப்-பின் இந்திய தலைவராக, அபிஜித் போஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.   சமூக வலைத்தளங்களில் ஒன்றான வாட்ஸ் அப்-பை கோடிக்கணக்கான இந்தியர்கள் பயன்படுத்துகின்றனர். உலகம் முழுவதும் 130 கோடி வாட்ஸ் அப் வாடிக்கையாளர்களில் சுமார் 20 கோடி பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனத்தின் இந்திய தலைவராக அபிஜித் போஸ் என்பவரை அந்நிறுவனம் நியமித்துள்ளது. இவர், பிரபல மின்னணு பணப்பரிமாற்ற செயலியான எஸ்டாப் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை …

Read More »