Chinna Samy

நூறு சேனல்களுக்கு 153 மட்டுமே கட்டணம் – டிராய் அதிரடி

விரும்பிய டிவி சேனல்களை பார்க்கும் திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 100 சேனல்களுக்கு ரூ.153 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக டிராய் தெரிவித்துள்ளது. தற்போது நமக்கு தேவைப்படாத சில சேனல்கள் இருந்தாலும் அதற்கும் சேர்த்து கட்டணம் செலுத்துகிறோம். இந்நிலையில் விரும்பிய சேனல்களுக்கு மட்டுமே பணம் செலுத்தி அந்தக் குறிப்பிட்ட சேனலை மட்டுமே பார்க்கும் முறை அமல்படுத்தப்படும் என டிராய் ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படி, தங்களுக்கு விருப்பமான சேனல்கள் பட்டியலை கேபிள் டிவி சேவை அல்லது …

Read More »

“டிக் டாக்” செயலிக்கு கட்டுப்பாடுகள் – ஆபாச ஆடைகள், வார்த்தைகளுக்கு தடை

“டிக் டாக்” ஆபாச பாணியில் ஆடை அணிந்து வீடியோ வெளியிடுவது, தகாத வார்த்தைகளை பேசுவது ஆகியவற்றிற்கு தடை விதித்து சீனா புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வளர்ந்து வரும் சமூக வலைத்தள நாகரிகங்களில், நாள்தோறும் புதிய வகை செயலிகள் வந்துகொண்டே இருக்கின்றன. இதில் ஃபேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவை மக்களிடம் நிலையாக தங்கியுள்ளன. அந்த வரிசையில் தற்போது “டிக் டாக்” என்ற குறு வீடியோ செயலியும் வந்துள்ளது. இதுபோன்ற …

Read More »

பொறியியல் பட்டதாரிகளுக்கு பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் வேலை!

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் 300 காலிப்பணியிடங்களுக்கான  Management Trainee பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அதில் வெளித்தேர்வர்கள் 150 பணியிடங்களுக்கு மட்டுமே இந்தத் தேர்வு நடைபெறும்.  பணி:  – Management Trainee (MT)  ( Telecom operations)  ஆன்லைனில் பதிவு செய்ய தொடங்கிய நாள் : 26.12.2018 ஆன்லைனில் பதிவு செய்ய கடைசி நாள் : 26.01.2019 ஆன்லைனில் தேர்வு தொடங்கும் நாள் …

Read More »

பொங்கல் அன்று தொடங்கும் ஹானர் “வீயூவ் 20” புக்கிங் – சிறப்பம்சங்கள் என்ன?

ஹானர் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான “வீயூவ் 20” விற்பனைக்கான முன்பதிவு பொங்கல் முதல் தொடங்குகிறது. அண்மையில் ரெட்மி நிறுவனம் வெளியிட்ட ஸ்மார்ட்போன் ஒன்றில் 48 மெகா பிக்ஸல் கேமரா லென்ஸ் வழங்கப்பட்டிருப்பது. இந்நிலையில் ஹானர் நிறுவனமும் “வீயூவ் 20” ஸ்மார்ட்போனை 48 மெகா பிக்ஸல் கேமராவுடன் வெளியிடவுள்ளது. இந்த போன் இந்தியாவில் ஜனவரி 29ஆம் தேதி முதல் விற்பனையாகிறது. இந்தியாவில் இரண்டு ரகங்களில் வெளியாகும் இந்த ஸ்மார்ட்போன் ரூ.30,400 மற்றும் …

Read More »

வாட்ஸ்அப் ஆடியோ அனுப்பும் வசதியில் புது அப்டேட்!

வாட்ஸ்அப் செயலியில் ஆடியோ அனுப்பும் முறையை மேலும் எளிதாக்கி வாட்ஸ்அப் நிறுவனம் அப்டேட் வழங்கியுள்ளது. வாட்ஸ்அப் செயலி என்பது உலகம் முழுவதும் உள்ள தகவல் பரிமாற்ற தொழில்நுட்பத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தச் செயலியை கடந்த 2014ஆம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கியது. இந்தியாவில் அதிக மக்கள் பயன்படுத்தும் தகவல் பரிமாற்ற செயலியாக வாட்ஸ்அப் உள்ளது. பயனாளர்களை கவரவும் செயலியை எப்போதும் புதுமையாக வைத்துக்கொள்ளவும் வாட்ஸ் அப் அவ்வப்போது …

Read More »

கூகுள் குரோமுக்கு போட்டியாக களத்தில் இறங்கிய ஜியோ 

கூகுள் குரோம் தேடுபொறிக்கு போட்டியாக ரிலைன்ஸ் ஜியோ நிறுவனம் ‘ஜியோ ப்ரெளசர்’ என்ற ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு வருடாங்‌களாக தொலைத்தொடர்பு துறையில் புரட்சியை ஏற்படுத்திவரும் ஜியோ நிறுவனம் தொடர்ந்து ஜியோ வைஃபை, ஜியோ ஜிகா‌ பைபர் உள்ளிட்ட பல புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களை தம்வசம் வைத்துள்ளது. அந்த வகையில் இணையத்தில் எளிமையாகவும், வேகமாகவும் பிரெளசிங் செய்ய ”ஜியோ ப்ரெளசர்” என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது.  இந்த ப்ரெளசிங் …

Read More »

குளிரான புதிய கிரகத்தை கண்டுபிடித்தது நாசா

சூரிய குடும்பத்திற்கு வெளியே புதிய கிரகத்தை நாசா ஆய்வு மையம் அனுப்பிய டெஸ் செயற்கைக்கோள் கண்டுபிடித்துள்ளது. சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள கோள்களை கண்டறிவதற்கான நாசாவின் டெஸ் செயற்கைக்கோள் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. ஃபுளோரிடாவின் கேப் கெனரவலில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் 9 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. 2 லட்சத்துக்கும் மேற்பட்ட நட்சத்திரங்களில் பூமியைப் போன்ற கிரகங்கள் உள்ளனவா என்று இந்தச் செயற்கைக்கோள் …

Read More »

வெளியாகிறது ரெட்மி நோட் 7 – விலை, சிறப்பம்சங்கள்

சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான ரெட்மி நாளை மறுநாள் வெளியாகும் என தகவல் வெளிவந்துள்ளது.  தற்போதைய காலக் கட்டத்தில் ஸ்மார்ட்போன் அனைவரிடமும் உள்ளது. இதில் எந்த ஸ்மார்ட்போன் குறைந்த விலையில், மிகுந்த வசதிகளை கொடுக்கின்றனவோ, அவை வாடிக்கையாளர்கள் வரவேற்பை பெறுகின்றது. இந்த வரவேற்பை பெறுவதற்காக அனைத்து நிறுவனங்களும் போட்டிபோட்டுக் கொண்டிருக்கின்றன. இதிலும் துல்லியமாக புகைப்படம் மற்றும் வீடியோ காட்சியை பதிவு செய்யும் கேமரா கொண்ட போன்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் தனி …

Read More »

“வாட்ஸ்அப் கோல்டு” கிளிக் பண்ணீடாதீங்க..! – ‘தொட்டா கெட்ட’ பயங்கர வைரஸ்

வாட்ஸ்-அப் கோல்டு எனப் பரவும் அப்டேட் என்ற போலி லிங்கை கிளிக் செய்தால் கடும் வைரஸ் ஸ்மார்ட்பொனை பாதிக்கும் என வாட்ஸ்அப் நிறுவனம் எச்சரித்துள்ளது. தற்போதைய காலக் கட்டத்தில் செல்போன் இன்றி வாழ்பவர்களை பார்ப்பது கடினம். சிட்டி முதல் பட்டி-தொட்டி வரை செல்போன் பரவிக்கிடக்கிறது. ஸ்மார்ட்போன் இல்லாமல் இருக்கும் இளைஞர்கள் ஊரில் ஒரு சிலர் கூட இல்லை. இதேபோன்று ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் அனைவருமே வாட்ஸ்-அப் பயன்படுத்துகின்றார்கள் என்று கூறலாம். வாட்ஸ்-அப்பில் …

Read More »

“ஓர் ஆண்டிற்குள் வேலை இழந்தவர்கள் 1 கோடி” – சிஎம்ஐஇ அறிக்கை

கடந்த 2018-ஆம் ஆண்டு இந்தியாவில் மட்டும் 1 கோடியே 10 லட்சம் பேர் வேலையிழந்தது தெரியவந்துள்ளது. நாட்டில் நிலவும் வேலை தட்டுப்பாடு என்பது, எப்போதுமே இளைஞர்கள் மட்டுமில்லாமல் பெற்றோர்களுக்கும் பெரும் வருத்தம் தரும் செய்தியாகவே உள்ளது. இந்நிலையில் கடந்த 2018-ஆம் ஆண்டு இந்தியாவில் மட்டும் 1 கோடியே 10 லட்சம் பேர் வேலையிழந்தது தெரியவந்துள்ளது. இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் அறிக்கையில் இந்தத் தகவல் வெளியாகி உள்ளது. அதிலும் மிகவும் …

Read More »